தோட்டப்புற தமிழ்ப்பள்ளி மாணவர்கள் போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு!

ஈப்போ, அக்.26: மஞ்சோங் மாவட்டத்தின் சொகமானா தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவன் தாஸ் போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளார். இவருடன் இவருடைய இந்திய நண்பர்களான இன்ஸ்பெக்டர் செல்வேஸ்வரன் விக்னேஸ்வரன், ஜுலியஸ் லூர்த்துசாமி, தேவ சேகர் சந்திரசேகர் மற்றும் மதன் முத்தையா ஆகியோர் போலீஸ் இன்பெக்டராக பதவி உயர்வு கிடைக்கப்பெற்றது இந்திய சமூகத்திற்கு கிடைத்த பெருமையாகும்.

நடுநிலை குடும்பத்தை சேர்ந்த தாஸ் தமது தொடக்க கல்வியை பேராக் ஆயர்தாவார் சொகமானா தோட்டத்தமிழ்ப்பள்ளியில் படித்தவராவார். அதன் பின், இடைநிலைப்பள்ளி மற்றும் தமது உயர்கல்வியை பினாங்கு பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர். தம்முடைய போலீஸ் பணியை தொடர்ந்து செய்துக்கொண்டே உயர்கல்வியை நிறைவு செய்த பெருமை இவரது குடும்பத்தையே சாரும்.

தற்போது பதவி உயர்வு பெற்று ஈப்போ மாவட்ட காவல் துறையின் வன்செயல் துடைத்தொழிப்பு இலாகாவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இரு பிள்ளைகளுக்கு தந்தையான இவரின் வெற்றிக்கு அவரது மனைவியின் அர்பணிப்பு மற்றும் தன்முனைப்பிறகு என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அலோர் ஸ்டார் சரஸ்வதி தமிழ்ப்பள்ளி மாணவனான இன்ஸ்பெக்டர் செல்வேஸ்வரன் விக்னேஸ்வரன் பதவி உயர்வு கிடைக்கப்பெற்றார். இவர் தமது உயர்கல்வியை வட மலேசியா பல்கலைக்கழகத்தில் நிறைவு செய்தவர். ஒரு பிள்ளைக்கு தந்தையான இவர் புக்கிட் அமானிலும் பணிபுரிந்தவர் ஆவார்

போர்ட்டிக்சன் சிலியாவ் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவனான மதன் முருகையாவும் போலீஸ் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு கிடைக்கப்பெற்றது பெருமை அளிக்கிறது. ஐந்து சகோதர சகோதரிகளை கொண்ட இவருக்கு ஒரு பெண் பிள்ளை உண்டு. இவரது மனைவி புவனேஸ்வரியின் அர்பணிப்பால் இன்று தாம் வெற்றி கண்டுள்ளதாக அவர் கூறினார். பட்டப்படிப்பை சிறப்பாக நிறைவு செய்துள்ளார்.

ஈப்போவை சேர்ந்த ஜலியஸ் லுர்த்துசாமி இங்குள்ள பங்ளிமா தேசிய பள்ளியில் படித்தவர். இடைநிலைப்பள்ளியான ஏசிஎஸ் பள்ளியில் கல்வியை தொடங்கியவர். இரு பட்டப்படிப்பை வட மலேசியா பல்கலைக்கழகத்தில் படித்தவர். இன்ஸ்பெக்டர் போலீஸ் பயிற்சியை அண்மையில் நிறைவு செய்தவர்.

சபாவில் தமது போலீஸ் பணியை தொடங்கி அங்கேயே பதவி உயர்வு கிடைக்கப் பெற்றவர் தேவ சேகர் சந்திரசேகர். போதைப்பொருள் ஒழிப்பு பிரிவில் பல ஆண்டுகளாக பணியாற்றிய பட்டறிவு கொண்டவர். இரு பிள்ளைகளுக்கு தந்தையான இவர் திறந்த பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவராவார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles