
சிப்பாங், அக் 26-
ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா அதிபர் டோனால்ட் டிராம்ப் இன்று அதிகாரப்பூர்வமாக மலேசிய வந்தடைந்தார்.
கேஎல்ஐஏ விமான நிலையம் வந்தவுடன், உள்ளூர் பாரம்பரிய நடனக் கலைஞர்களுடன் டோனால்ட் டிராம்ப் நடனமாடி அனைவரையும் கவர்ந்தார்.
இவர் நடனம் ஆடிய காட்சி உலகின் கவனத்தை பெரிதும் ஈர்த்தது. டோனால்ட் டிரம்பை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விமான நிலையத்தில் வரவேற்று மகிழ்ந்தார்.
வரவேற்பின் அடையாளமாக மலேசிய கலாச்சார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஏர் ஃபோர்ஸ் ஒன், போயிங் 747-200பி விமானத்திலிருந்து இறங்கிய அவர், சிரித்துக் கொண்டே நடனக் கலைஞர்களின் ளத்தை நோக்கி செல்வதை காண முடிந்தது.
பின்னர் அவரும் நடனம் ஆடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தைக் காண வந்திருந்த கூட்டத்தினரிடமிருந்து இது பெரும் ஆரவாரத்தையும் கைதட்டலையும் பெற்றது.
அதன் பின்னர் நடனக் கலைஞர்களுக்கு தனது பாராட்டைத் தெரிவிக்கும் விதமாக சல்யூட் வைத்தார்.
தொடர்ந்து அவரிடம் மலேசியக் கொடியும் அமெரிக்கக் கொடியும் தரப்பட்டது. அதனை வாங்கிக் கொண்டு சிறிது நேரம் அசைத்துக் காட்டினார்.
பின்னர் அமெரிக்க அதிபரும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமும் ஒரே காரில் விமான நிலையம் விட்டுப் புறப்பட்டனர்.

