

பேரா, கம்போங் கபாயாங்கில் எழுந்தருளியுள்ள 129 ஆண்டு கால பழமை வாய்ந்தது ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ஆலயத்தின் கந்த சஷ்டி பெருவிழா மிகவும் சிறப்புடன் நடைபெற்றது.
இவ்விழாவை முன்னிட்டு இம்மாதம் 22 ஆம் தேதி தொடங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்று சூரசம்ஹாரா நிகழ்வு 27-10-25 இல் நடைபெற்றதுடன் மறுநாள் ( 28-10-25) நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வும் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த வைபவத்தில் பெரும் திரளான மக்கள் கலந்துக்கொண்டனர்.
கந்தர் சஷ்டி நிகழ்வில் போலீஸ் அதிகாரிகளின் சிறப்பு பூஜையும் நடைபெற்றதாக இந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் பணி ஒய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரி் டத்தோ சுரேஷ்குமார் கூறினார்.
இந்த ஆலயத்தில் கடந்த 21 ஆண்டு காலமாக போலீசாரின் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பேரா மாநிலத்தில் இரண்டாவது பெரிய ஆலயமாக கம்போங் கப்பாயங் சிவ சுப்பிரமணியர் ஆலயம் விளங்கி வருகிறது.
இந்த ஆலயம் மேற்கொள்ளும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் ஆலயத் தலைவர் சுந்தரராசு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்

