சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் திருக்கல்யாணம். திரளான பக்தர்கள் தரிசனம்.

சுங்கைபட்டாணி, ஆக30-
கடந்த 6 நாட்களாக சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தில் நடைபெற்ற கந்த சஷ்டி விழா சூரசம்ஹாரத்துடன் நிறைவடைந்த மறுநாளே “முருகர் திருக்கல்யாண வைபவம் “வெகு சிறப்பாக நடைபெற்றது.


வள்ளி தெய்வானையுடன் ஆனந்தத்துடன் மணக்கோலத்தில் காணப்பட்ட முருகப் பெருமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாக திரண்டு தரிசனம் செய்தனர்.


லோகநாதன் குருக்கள் தலைமையில் நடைபெற்ற முருகப்ப் பெருமானின் திருமணம் மாப்பிள்ளை வீட்டாராக ஆலயத் தலைவர் பெ.இராஜந்திரன் குடும்பத்தினரும்,தேவயானை குடும்பத்தாராக ஆலயச் செயலாளர் மு.நந்தகோபலான் குடும்பத்தினரும்,வள்ளியம்மை குடும்பத்தினராக ஆலயப் பொருளாளர் ந.பத்தமநாதன் குடும்பத்தார் முன்னனியில் இத்திருமணம் விமரிசையாக நடைபெற்றது.


திருக்கல்யாண உற்சவத்துடன் இந்த ஆண்டு கந்த கந்த சஷ்டி விழா நிறைவுப் பெற்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles