

காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 29-
மலேசிய இந்திய இளைஞர்களின் வாழ்க்கையை உருமாற்றுவதே மிசி திட்டத்தின் முதன்மை இலக்காகும் என்று
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவித்தார்.
மனிதவள அமைச்சராக பொறுபேற்றது முதல் அனைவருக்குமான அமைச்சராக தான் நான் பணியாற்றி வருகிறேன்.
குறிப்பாக தொழிலாளர்கள் வர்க்கத்தில் எந்தவொரு பாராபட்சத்தையும் நான் பார்ப்பது இல்லை. எல்லாருக்கும் உரிய சேவைகளை வழங்கி வருகிறேன்.
இந்திய சமுதாயத்திற்கு பிரதிநிதிகள் இல்லை என்ற அதிருப்திகள் உள்ளன. என்னை பொறுத்த வரையில் இந்திய மக்களுக்கும் உரிய சேவைகளை வழங்கி வருகிறேன்.
ஆக இந்திய சமுதாயம் பிரதிநிதிகள் இல்லை என கவலைப்பட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மேலும் எனது அமைச்சின் கீழ் மிசி எனும் இந்திய இளைஞர்களுக்கான தொழில் திறன் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இப்பயிற்சி திட்டத்தின் கீழ் கிட்டத்தட்ட 5,000 இந்திய இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்.
இதன் அடிப்படையில் மிசி 2.0 திட்டத்தையும் அடுத்த ஆண்டு நாங்கள் மேற்கொள்ள உள்ளோம்.ஏதோ கணக்கிற்கு ஒருசில பயிற்சிகளை வழங்குவது மனிதவள அமைச்சின் நோக்கம் அல்ல.
நாங்கள் அளிக்கும் பயிற்சியில் இந்திய இளைஞர்களை உருமாற்ற வேண்டும்.
இதன் அடிப்படையில்தான் இப்பயிற்சிகள் முன்னெடுக்கப்படவுள்ளது என்று தமிழ் ஊடகங்களுடனான சிறப்பு விருந்துபசரிப்பில் அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
தமிழ் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் நிருபர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் அவர்கள் மனிதவள அமைச்சர் ஸ்டீபன் சிம்முக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

