மித்ரா மட்டுமல்ல அனைத்து அமைச்சுகளும் இந்தியர்களின் நலனைக் காக்கும்! டத்தோஸ்ரீ ரமணன்

மித்ரா மட்டுமே இந்தியர்களின் நலனைப் பாதுக்காக்கும் ஒரே தலமாக இருக்கிறது என்பதைத் தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சின் துணை அமைச்சர்  நாடாளுமன்றத்தில் மறுத்தார்.

மடானி அரசாங்கத்தில் உள்ள அனைத்து அமைச்சுகளுக்கும் இந்தியர்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளதாக  நினைவூட்டினார். குறிப்பாகத் தமது அமைச்சின் மூலமாகவும் இந்தியர்களுக்கான சிறப்புத் திட்டங்களைத் தாம் உருவாக்கியிருப்பதையும்  சுட்டிக்காட்டினார்.

மனிதவள அமைச்சின் PERKASA திட்டம், கல்வி அமைச்சின் தமிழ்ப்பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம், வீட்டுவசதி உள்ளாட்சி அமைச்சின் கோயில்கள் பராமரிப்புக்கு 50 மில்லியன் நிதி ஒதுக்கீடு, ஒற்றுமை அமைச்சின் தர்மா மடானிக்கு 20 மில்லியன் ரிங்கிட் என மக்கள் நலத்திட்டங்கள் கொண்டிருக்கும் அனைத்து அமைச்சிலும் இந்தியர்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சு, கல்வியமைச்சு, மனிதவள அமைச்சு, வீட்டுவசதி, ஊராட்சித் துறை அமைச்சு, அனைத்து இனங்களுக்கும் மேம்பாட்டுத் திட்டங்களை வழங்கும் பிற அமைப்புகள் போன்ற பிற நிறுவனங்கள்,  அமைச்சு மூலம் பல்வேறு கூடுதல் ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

இன்று மக்களவையில் மித்ராவை பிரதிநிதித்துவப்படுத்தும் கொள்கை அளவில் விநியோக மசோதா 2026இன் இறுதி அமர்வில் அவர் இவ்வாறு கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles