கரிகால சோழன் மன்னனின் வரலாற்று இலக்கிய மேடை நாடகம்!

கோலாலம்பூர் அக் 31-
காலத்தால் அழியாத தமிழர்களின் பெருமைமிகு அடையாளமான கரிகால் சோழனின் வரலாற்று இலக்கிய மேடை நாடகம் ஒவ்வொரு தமிழரும் கலந்து பயன்பெற வேண்டும் என்று சமூக ஆர்வலர் கணேசன் கேட்டுக் கொண்டார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பு
உலகம் போற்றும் தமிழ் இனத்தில் பிறந்து, இமயம் முதல் குமரிவரை புலிக்கொடி நாட்டி ,
வீரம்,நீதி என்று மக்களுக்காக வாழ்ந்த முற்காலச் சோழர்களில் மிக முக்கியமான மன்னராக கரிகால சோழன் திகழ்கிறார்.

சங்ககாலச் சோழர்களில் கரிகாலனுக்கு இணையாக யாரும் இல்லை என்பது யாராலும் மறுக்க முடியாது உண்மை.

தொழில்நுட்பம் இல்லாத காலத்திலே
காவிரி நதியின் குறுக்கே உலகில் பழமை வாய்ந்த கல்லணையை கட்டிய பெருமைக்குரிய மன்னரும் கரிகால சோழன்தான்.

சங்க கால தமிழர்களின் பொறியியல் திறனை வெளிப்படுத்தும் பழமையான அணையாக மட்டும் இல்லாமல், விவசாயிகளின் பயன்பாட்டிற்காக இன்றளவும் உதவுகிறது.

வரலாற்றை மறந்த சமூகம்
வரலாற்றை படைக்க முடியாது என்று சொல்வார்கள்.

ஒவ்வொரு இனத்துக்கும் தங்களின் வரலாறு மிக முக்கியமான ஒன்றாக இருக்கும் பச்சத்தில், தமிழர்களின் வீர மிகு அடையாளமாக திகழும் கரிகால் சோழனின் வரலாற்று இலக்கிய மேடை நாடகம் வரும் சனிக்கிழமை நவம்பர் ஒன்றாம் திகதி பகாங் மெந்தகாப் நகரில் ( Dewan Chung Wa ) நடக்கவுள்ளது.

அனைவரும் திரளாக கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles