மலேசிய இந்தியர் மக்கள் கட்சிக்கு நான்தான் சட்டப்பூர்வ தலைவர்! புனிதன் அறிவிப்பு

பெட்டாலிங் ஜெயா, நவ 3-
மலேசிய இந்திய மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் நான் .
கட்சிக்கும் நான் தான் தலைவர் என்று புனிதன் அதிரடியாக அறிவித்தார்.

மலேசிய இந்தியர் மக்கள் கட்சியில் தலைவரான நான் அக்கட்சியின் உறுப்பினர் அல்ல என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

குறிப்பாக ஆண்டுக் கூட்டம் தொடர்பில் சங்கங்களின் பதிவிலாகாவில் புகார் செய்யப்பட்டுள்ளது என ஒரு சிலர் குற்றம் சாட்டியுள்ளனர்.உண்மையில் இவ்விவகாரத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

காரணம் இரண்டு ஆண்டுகளாக நான் கட்சியின் தலைவராக உள்ளேன். கட்சியை வலுப்படுத்தியதுடன் தேசியக் கூட்டணியில் முக்கிய கட்சியாக மலேசிய இந்திய மக்கள் கட்சி விளங்கி வருகிறது.

ஆண்டுக் கூட்டம், தீபாவளி திறந்த இல்ல உச்சரிப்பு, தேர்தல் பிரச்சாரம் என கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் நான் கட்சியில் உறுப்பினர் அல்ல. இதனால் கட்சிக்கு தலைவர் என குற்றம் காட்டுகின்றனர்.

இந்த குற்றச்சாட்டுகளால் எனக்கும் மக்களுக்கும் சிரிப்பு தான் வரும்.ஆக யார் என்ன சொன்னாலும் நான் தான் கட்சியின் தேசியத் தலைவர்.

இதை யாராலும் மாற்ற முடியாது. அதே வேளையில் இது தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும் நான் தயார்.

பெட்டாலிங்ஜெயாவில் நடைபெற்ற மலேசிய இந்திய மக்கள் கட்சியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு விழாவிற்கு பின் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

பெரிக்கத்தான் நேஷனல் கூட்டணியின் தலைவர் டான்ஸ்ரீ மொகிதீன் யாசின், டத்தோ முக்ரிஸ், டத்தோஸ்ரீ அஸ்மின் அலி,கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles