


சுங்கை பூலோ, நவ 3-
நாட்டில் புகழ்பெற்ற குட்வில் கால்பந்து கிளப் ஏற்பாட்டில் சுங்கை பூலோ மெல்வூட் அரங்கில் நடைபெற்ற தீபாவளி கிண்ண கால்பந்து போட்டியில் HSM FC வெற்றி பெற்று சாம்பியன் கிண்ணத்தை தட்டிச் சென்றது.

மிகப்பெரிய அளவில் நடைபெற்ற இந்த போட்டியில் 16 கிளப்புகள் கலந்து கொண்டன.
இதில் HSM FC சாம்பியன் திட்டத்தையும் 5,000 வெள்ளி ரொக்கப் தையும் தட்டிச் சென்றது.

இரண்டாம் இடத்தைப் பிடித்த Bastari கிளப்புக்கு 3,000 வெள்ளி ரொக்க மும் 3,4 ஆவது இடங்களைப் பிடித்த Ulu Bernam, Goodwill கிளப்புக்கு தலா 1,000 வெள்ளி வழங்கப்பட்டது.
குட்வில் கால்பந்து கிளப் தலைவர் கலை தலைமையில் நடைபெற்ற இந்த போட்டி வெற்றி பெற ஆதரவு வழங்கிய யாங் பெர்பஹியா டாக்டர் மனோ பரமசிவம், இளங்கோவன், டத்தோ கோபால், ஹரி, சிவமணி உட்பட பலருக்கும் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

முன்னாள் சிலாங்கூர் ஆட்டக்காரர் சோமசுந்தரம், புவியரசன், தமிழ், சோமசுந்தரம் உட்பட குட் வில் கால்பந்து கிளப் உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

