

பேராக் மாநில தம்பூன் நாடாளுமன்ற தொகுதியின் ஏற்பாட்டில் இன்று காலையில் கெளாபாங் செம்மூர் தமிழ்ப்பள்ளி திடலில் தைப்பொங்கல் விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
தம்பூன் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினரும் நாட்டின் 10 ஆவது பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
தம்பூன் நாடாளுமன்ற தொகுதி இந்தியர்களின் சேவை மையத்தின் ஏற்பாட்டில் சுரேஸ்குமார், ஜி. தியாகராஜன் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.
டத்தோஸ்ரீ அன்வாருடன் இணைந்து நூற்றுக் கணக்கான மக்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.

