
புற்றுநோயால் அவதியுற்று வரும் காயத்ரியின் மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான நிதியுதவியை வழங்கும்படி பொது மக்களை புதிய தலைமுறை முற்போக்கு அமைப்பின் தலைவர் டாக்டர் செல்வேந்திரன் கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மிகவும் சிரமமான சூழலில் வாழும் இக்குடும்பத்தினரால் மகள் காயத்ரியின் மருத்துவ சிகிச்சைக்கான நிதியை திரட்ட இயலவில்லை என்பதால் இக்குடும்பத்தினர் பொது மக்களின் உதவியைப் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.
குடும்பச் சூழல், காயத்ரியின் உடல் நிலை ஆகியவற்றைத் தெரிந்து கொண்ட பின்னர் தங்களால் இயன்ற நிதியை காயத்ரியின் தாயாரிடம் ஒப்படைத்தோம்.
காயத்ரி விரைவில் சிகிச்சை மேற்கொள்வதற்கு ஏதுவாக நிதியுதவி வழங்கும்படி நல்லுள்ளங்களை அவர் கேட்டுக் கொண்டார்.
உயர் கல்வி பெற்ற காயத்ரி பூரண குணமடைந்து சிறந்த எதிர்காலத்தைப் பெற அனைவரின் ஒத்துழைப்பும் தேவை.
மேல் விவரங்களுக்கு விஜயலெட்சுமின் தாயார் காயத்ரியுடன் தாயார்) 014-7593991 என்ற எண்ணில் அல்லது பப்ளிக் வங்கி 6896444113 என்ற வங்கி கணக்கில் பணத்தை செலுத்தலாம் என்று அவர் சொன்னார்.

