

கேமரன் மலையில் வாழும் வசதி குறைந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் சொந்த வீடுகள் இல்லாமல் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
குறைந்த வருமானம் கொண்ட இவர்கள் சொந்த வீடுகளுக்காக 40 ஆண்டுகள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலையில் புத்ரா ஜெயா நிதியமைச்சு முன் திரண்ட இவர்கள் தங்களுக்கு சொந்த வீடுகளை கட்டித் தர பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் புதிய பட்ஜெட்டில் நிதியை ஒதுக்கி வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
இவர்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுக்க நிதியமைச்சு நிதியை ஒதுக்கினால் நாங்கள் வீடுகளை கட்டித் தர தயாராக இருக்கிறோம் என்று வீடமைப்பு அமைச்சு அறிவித்திருப்பதாக பி.எஸ்.எம். கட்சி செயலாளர் சிவராஜன் தெரிவித்தார்.
அந்த வகையில் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கருணையோடு இந்த ஏழை மக்கள் சொந்த வீடுகள் கிடைக்க புதிய பட்ஜெட்டில் நிதியை ஒதுக்கி வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கேமரன் மலை பி.எஸ்.எம். கட்சி தலைவர் சுரேஸ் தலைமையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட கேமரன் மலை மக்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

