பிப்ரவரி 3 ஆம் தேதி
இரவு 10.00 மணிக்கு மேல்
வெள்ளிரதம் பத்துமலையை நோக்கி புறப்படும்!
டான்ஸ்ரீ ஆர். நடராஜா அறிவிப்பு

தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு வரும் பிப்ரவரி 3ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் வெள்ளிரதம் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் தாய்க்கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பத்துமலை திருத்தலத்தை நோக்கி புறப்படும் என ஸ்ரீ மகா மாரிம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.

வழக்கம் போல் வெள்ளிரதம் ஊர்வலமாக வந்து மறுநாள் பிப்ரவரி 4 ஆம் தேதி மதியம் பத்துமலை திருத்தலத்தை வந்தடைந்ததும் மாலையில் 5.30 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் சேவக் கொடி ஏற்றப்படும்.

இவ்வாண்டு பத்துமலை தைப்பூசத் திருவிழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் வேளையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று அவர் சொன்னார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles