
கோலாலம்பூர் நவ 5-
திரு. வேலு- ராஜேஸ்வரி தம்பதியரின் அன்பு புதல்வி குமாரி பார்கவியின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி சனிக்கிழமை தேசிய அருங்காட்சியக ஆடிட்டோரியத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
நாட்டிய நடன சபெஸ்சன் குரு ஸ்ரீ சரவண கணேசனிடம் முறையாக பரதநாட்டியம் பயின்றவர் குமாரி பார்கவி ஆவார்.
நடன சிரோன்மணி குரு ஸ்ரீமதி குமுதினி சிவநாதன், குரு ஸ்ரீ இந்திரன் கே இராமசாமி ஆகியோர் பிரதான பிரமுகர்களாக கலந்து கொண்டனர்.
அதேசமயம் திரு Samad
(President of Blues Brothers Welfare Association Malaysia),
திரு Bala
(President of Blues Brothers Welfare Association India)
திரு. Mike
(Advisor of Blues Brothers Welfare Association), திரு Leo
(Lead of It & Technical Blues Brothers Welfare Association) மற்றும்
Datuk Dr M.Shankar
(Youth leader of Blues Brothers Welfare Association Malaysia)
திரு Thilaiyamutan (Secretary Blues Brothers Welfare And Association Malaysia ) , திரு Ravi (Safety & Health Blues Brothers Welfare And Association Malaysia) ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குமாரி பார்கவி வேலுவின் அரங்கேற்றம் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியும் பெருமையும் அளித்தது என்று டத்தோ டாக்டர் எம். சங்கர் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பம் அவரது அர்ப்பணிப்பு மற்றும் பல வருட பயிற்சியை மட்டுமல்ல, அவர் பெற்ற ஆசீர்வாதங்களையும் வழிகாட்டுதலையும் குறிக்கிறது.
அவரது நடன அறிமுகத்தைக் காணவும், அவரது கலைத்திறனை நேரில் பார்த்து வியாந்து போனோம் என்று அவர் சொன்னார்.

