

கோலாலம்பூர் நவ 9-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பிபிபி கட்சியின் பொது உபசரிப்பு மிகப்பெரிய அளவில் நடைபெற்றது..
கோலாலம்பூர் கம்போங் அத்தாப் பிபிபி கட்சியின் தலைமையகத்தில் காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணிவரை இந்த பொது உபசரிப்பில் 5,000க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர்.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பிபிபி கட்சியின் துணைத் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, உதவித் தலைவர் டத்தோ இளையப்பன், செயலாளர் டத்தோ இண்டர்ஜிட், பொருளாளர் டத்தோஸ்ரீ டல்ஜிட், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனிசாமி, சிலாங்கூர் மாநில தலைவர் டாக்டர் சுரேந்திரன், தகவல் தொடர்பு துறை அதிகாரி ஸ்டீவன், துணை தலைவர் குமார் ஆகியோர் உட்பட கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் பெரும் அளவில் கலந்து சிறப்பித்தனர்.
மின்னல் பண்பலை வானொலி அறிவிப்பாளர் பொன் கோகிலம் விழாவை திறம்பட வழி நடத்தினார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன், மலேசிய நகரத்தார் சங்கத்தின் தலைவர் டத்தோ இராமநாதன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கொண்டனர்.
ஆடல் பாடல் இன்னிசை விருந்துடன் நடைபெற்ற இந்த விழாவில் பொது மக்கள் பெரும் மகிழ்ச்சியை அடைந்தனர்.

