அடுத்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி பூச்சி ரவியின் உறவுகள் மேடை நாடகம் அரங்கேற்றம்!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் நவ 12-
நாட்டில் புகழ்பெற்ற கலைஞர் பூச்சி ரவியின் உறவுகள் மேடை நாடகத்தின் முதல் அரங்கேற்றம் 1-3-2026 ஆம் தேதி டான்ஸ்ரீ சோமா அரங்கில் அதிகாரப்பூர்வமாக அரங்கேற்றம் காண்கிறது என்று இயக்குனர் பூச்சி ரவி தெரிவித்தார்.

இந்த நாடகத்தின் அறிமுக விழா இன்று டான்ஸ்ரீ சோமா அரங்கில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

மலேசிய கலை கலாச்சார இயக்கம் ஏற்பாட்டில்
தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் கலை கலாச்சார அறவாரிய ஆதரவில் மலேசிய முத்தமிழ்ச் சங்கத்தின் ஒருங்கிணைப்பில் பூச்சி ரவியின் உறவுகள் மேடை நாடகம் அரங்கேற்றம் காண்கிறது.

உறவுகள் மேடை நாடகத்தின் கதை, திரைக்கதை, இயக்குனர் ஆகிய பொறுப்புக்களை பூச்சி ரவி ஏற்றுள்ளார்.

தயாரிப்பாளர் எஸ்.பி. மணிவாசகம், நிர்வாக தயாரிப்பாளர் கரு.பன்னீர்செல்வம் மற்றும் ஆலோசகர் பாஸ்கரன் (பாஸ்கி) ஆகியோர் உறவுகள் மேடை நாடகம் வெற்றி பெற முக்கிய பங்காற்றி இருக்கிறார்கள்.

குடும்ப உறவுகளை மையப்படுத்தி இந்த உறவுகள் மேடை நாடகம் உயிரோட்டமாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய நிதி கூட்டுறவு சங்கத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோ ப.சகாதேவன் முழு ஆதரவு வழங்கி உள்ளார்

தேசிய நிலநிதி கூட்டுறவு கழகத்தின் சார்பில் 5,000 வெள்ளி வழங்கியுள்ளார்.

மேலும் உதவி வழங்க டத்தோ சகாதேவன் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று பூச்சி ரவி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles