2026 ஜொகூர் வரவு–செலவு திட்டம் அடுத்த மாநிலத் தேர்தலுக்கான அறிகுறி!பெரிகத்தான் நேஷனல் – சந்திர சேகரன் கருத்து

ஜொகூர் மாநில முதல்வர் அறிவித்த 2026-ஆம் ஆண்டுக்கான ஜொகூர் மாநில வரவு–செலவு திட்டம், அடுத்த மாநிலத் தேர்தலுக்கான அரசியல் தயாரிப்பாகும் என ஜொகூர் மாநில பெரிகத்தான் நேஷனல் உச்சமன்ற உறுப்பினர் திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

மாநில முதல்வர் ஓன் ஹாஃபிஸ் அறிவித்த வரவு–செலவு திட்டத்தை கவனமாக ஆராய்ந்தால், அது தேர்தலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட “தேர்தல் பட்ஜெட்” என்பதும் தெளிவாகிறது என்று சமூக ஆர்வலருமான சந்திர சேகரன் சுட்டிக்காட்டினார்.

டத்தோ ஓன் ஹாஃபிஸ் அறிவித்த ஜொகூர் 2026 வரவு–செலவு திட்டம், அடுத்த மாநிலத் தேர்தலை முன்னிட்டு வடிவமைக்கப்பட்ட தேர்தல் நோக்கமுள்ள பட்ஜெட் என்பதை பல உதவித் தொகைகள் மற்றும் நிதி அறிவிப்புகள் வெளிப்படுத்துகின்றன. இது “மக்கள் பட்ஜெட்” அல்ல; முந்தைய தேர்தலில் இழந்த வாக்குகளை மீண்டும் பெறுவதற்கான முயற்சி என்பது தெளிவாகத் தெரிகிறது என பெரிகத்தான் நேஷனல் கூலாய் தொகுதி மலாய்காரர் அல்லாத பிரிவு தலைவருமான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles