

பீடோர்,நவ16 : எஸ்.பி.எம் தேர்வை எழுதும் மாணவர்கள் பதற்றமின்றி நல்ல மனநிலையில் தேர்வை எழுதிட வேண்டும்.
இத்தனை நாள் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்டதுதான் தேர்வில் கேள்விகளாய் வரும்.கற்றதை மீண்டும் சிறப்பான முறையில் மீள்பார்வை செய்தால் நிச்சயம் சிறந்த தேர்வு முடிவுகளைப் பெற முடியும் என இளம் வழக்கறிஞர் சி.லவன்யா தெரிவித்தார்.
பீடோர் வட்டார இடைநிலைப்பள்ளி மாணவர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியில் லவன்யா இதனைக் குறிப்பிட்டார்.
அதே வேளையில்,எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த தேர்ச்சி பெறாவிட்டால் நம் எதிர்காலமே இருண்டு விட்டதாக மாணவர்கள் எண்ணிவிடக்கூடாது.மாறாய்,தொழிற்கல்வி உட்பட எத்தனை எத்தனையோ வாய்ப்பு நாட்டில் இருப்பதாகவும் நினைவுறுத்தினார்.
தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த ஒரு மாதகாலத்திற்கு தேர்வை மட்டுமே இலக்காக கொண்டு கவனத்தோடு தேர்வை கையாள வேண்டும் எனவும் கேட்டு கொண்ட அவர் நன் நிலையில் தேர்ச்சி பெற மாணவர்களுக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து கொண்டார்.
பீடோர் சித்தி விநாயகர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறிய இந்நிகழ்ச்சியில் பீடோர் ஷேக் அப்துல் கனி இடைநிலைப்பள்ளி மற்றும் பீடோர் இடைநிலைப்பள்ளியை சேர்ந்த சுமார் 65 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் வழக்கறிஞர் லவன்யா எழுதுகோல் உட்பட தேர்வு தேவையானப்.பொருட்களை அன்பளிப்பாக வழங்கி ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

