
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ஆர் நடராஜா தெரிவித்தார்.
அவரை சந்தித்து முறையாக அழைப்பிதழ் கொடுத்து விட்டோம். அந்த வகையில் அவர் வருவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
மனித வள அமைச்சர் வ. சிவகுமார், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ எம் சரவணன், மொரியஸ் – அமெரிக்க தூதர்கள் கலந்து கொள்கிறார்கள்.
கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமிக்கும் தேவஸ்தானத்தின் சார்பில் அழைப்பை கொடுத்து விட்டோம்.
அவரும் வருகை புரிந்தால் மாலை அணிவித்து மரியாதை செய்வோம் என்று அவர் சொன்னார்.

