பிரிக்பீல்ட்ஸில் உடைபடும் அபாயத்தில் 12 இந்தியர் அங்காடி கடைகள்!
அமைச்சர் சிவகுமார் மூலம் தீர்வு காணப்படும்

பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் சுமார் 12 க்கும் மேற்பட்ட இந்தியர்களின் அங்காடி கடைகள் உடைபடும் அபாயத்தை எதிர்நோக்கி உள்ளன.

இந்த கடைகள் அகற்றப்பட்டால் இங்கு காலங்காலமாக வியாபாரம் செய்து வரும் இந்தியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறும் என்று மீரா கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ ஆர் சந்திரகுமணன் தெரிவித்தார்.

இவர்கள் எதிர்நோக்கி இருக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண மனித வள அமைச்சர் வ. சிவகுமார் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.

நேற்று கோலாலம்பூர் மாநகர் மன்றத்துடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் என்னுடன் மனித வள அமைச்சர் சிவக்குமாரின் அரசியல் செயலாளர் ரவிந்திரன் கலந்து கொண்டார்.

தைப்பூசத்திற்கு பின்னர் இந்த கடைக்காரர்களை நேரில் சந்திக்க அமைச்சர் சிவகுமார் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

இவரின் வருகை மூலம் இந்த பிரச்சினைக்கு நல்ல முறையில் தீர்வு பிறக்கலாம் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles