
நிதியமைச்சின் மூத்த ஆலோசகராக தனது மகள் நூருல் இஸாவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நியமனம் செய்திருப்பதை பிரபல சமூக சேவையாளர் டத்தோஸ்ரீ ஆர்.கே. இராதாகிருஷ்ணன் பெரிதும் வரவேற்றுள்ளார்.
சிறு வயது முதல் பல போராட்டங்களில் பங்கேற்று முத்திரை பதித்தவர். மேலும் மூன்று முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களுக்கு சேவையாற்றியவர்.
இவரின் நியமனத்தை சில தரப்பினர் எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளது.
எந்தவொரு அலவான்ட்ஸ் இல்லாமல் இந்த பதவி அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரின் கல்வி தகுதி குறித்து கேள்வி எழுப்புகிறார்கள்.
இதற்கு முன்னர் சாதாரண கல்வியை கற்றவர்கள் அமைச்சர்களாக இருந்து சாதனை படைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில் நூருல் இஸா அன்வார் தனது திறமையை நிரூபிக்க நாம் ஒரு வாய்ப்பை வழங்குவோம்.
தனது தந்தையின் நற்பெயரை காப்பாற்ற நூருல் இஸா அன்வார் கடுமையாக உழைப்பார் என்பதில் சந்தேகமில்லை.
இப்போது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நாடு பொருளாதார வளர்ச்சியை நோக்கி செல்கிறது.
ஆகவே இந்த புதிய அரசாங்கத்திற்கு நாம் அவகாசம் வழங்கி ஆதரவு கொடுப்போம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

