

கூட்டரசு பிரதேச தினத்தை முன்னிட்டு இன்று 164 பேருக்கு மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா உயரிய விருதுகளை வழங்கி சிறப்பித்தார்.
அமானா கட்சியின் தேசியத் தலைவரும் பிரபல அரசியல்வாதியும் உணவு விவசாய துறை அமைச்சருமான முகமட் சாபுவுக்கு டத்தோஸ்ரீ விருது வழங்கி சிறப்பிக்கப் பட்டது.
சீ விளையாட்டுப் போட்டிகளில் நாட்டிற்கு ஏழு தங்கப் பதக்கம் மற்றும் ஆசிய போட்டியில் இரண்டு வெண்கலப் பதக்கம் பெற்று தந்து சாதனை படைத்த கராத்தே மாஸ்டர் பி
அறிவழகனுக்கு டத்தோ விருது வழங்கி சிறப்பிக்தப்பட்டுள்ளது.
பல அனைத்துலக விளையாட்டு போட்டிகளில் மலேசியாவுக்கு தங்கப் பதக்கங்களை வாரி குவித்தவர்கள் கராத்தே தலைமை மாஸ்டர் டி. பொன்னையா தலைமையிலான கராத்தே வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் கராத்தே பொன்னையாவின் மூன்று புதல்வர்களான அறிவழகன், தென்னவன், தியாகு ஆகியோர் முக்கிய கராத்தே வீரர்கள் ஆவார்.
இந்நிலையில் டத்தோ விருது பெற்றிருக்கும் டத்தோ அறிவழகனுக்கு தினத்தந்தி சிட்டிசன் இணையத்தளம் மனமார வாழ்த்துகிறது.

