மரியாதை இல்லாத கூட்டணி நிலைக்காது!-: டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர், நவ.16-
ஒரு அரசியல் கூட்டணிக்குள் மரியாதை இல்லாத நடத்தை, மிரட்டல் போன்ற செயல்கள் நிலவும் நிலையில், இப்படியான கூட்டணி நீடிக்குமா என்பதை உறுதியாக கூற முடியாது என்று மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சாடினார்.

தேசிய முன்னணி கூட்டணி என்பது அம்னோ, மஇகா, மசீச ஆகிய கட்சிகளை கொண்டதாகும்.

இந்த கூட்டணி நாட்டின் சுதந்திர காலத்தில் தொடங்கப்பட்டது .

ஒரு தரப்பின் ஆதிக்கம் இந்த கூட்டணியில் இருக்கக்கூடாது என மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவையில் அவர் சொன்னார்.

தேசிய முன்னணி ஆட்சியை இழந்த பின்னர், பக்காத்தான் ஹராப்பானுடன் இணையம் முடிவை தேசிய முன்னணி எடுக்கவில்லை. அது அம்னோவின் சொந்த முடிவு என அவர் சொன்னார்.

அம்னோவின் இந்த முடிவினால் அது தற்போது 70% மலாய்காரர்களின் ஆதரவை இழந்துள்ளது. இது அவர்களின் சொந்த முடிவினால் ஏற்பட்ட விளைவாகும்.

கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கு தங்கள் கருத்தை பதிவு செய்ய கூட அம்னோ வாய்ப்பு அளிக்கவில்லை.

இது கூட்டணிக்குள் விரக்தியை அதிகரிக்கும் அம்சமாக இருந்தது என்று அவர் சாடினார்.

அதேவேளை, ஆட்சியை இழந்த பின்பு பல அம்னோ தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட காலகட்டத்திலும், மஇகா தொடர்ந்து அம்னோவை ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

இந்நேரத்தில் எடுக்கப்பட்ட புதிய அரசியல் முடிவு, கூட்டணியில் உள்ள தோழமை கட்சிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

மஇகாவிடம் எந்த அரசாங்க பதவியும் இல்லை. இருந்தபோதும் தனித்து செயல்பட எங்களால் முடியும்.

ஒருபோதும் எங்களின் தன்மானத்தை நாங்கள் விட்டுக் கொடுக்க மாட்டோம் என டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சூளுரைத்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles