மஇகாவை காலங்காலமாக தூட்டியவர்கள் இன்றுகுரல் இல்லாமல் இருக்கிறார்கள்- :டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

காளிதாஸ் சுப்ரமணியம்

ஷா ஆலம் நவ.16-
அன்று எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஆட்சியில் இருந்த மஇகாவை காலம் காலமாக குறைக்கூறி வந்த எதிர்க்கட்சி இந்திய தலைவர்கள் இன்று குரல் இல்லாமல் ஆட்சியில் அமர்ந்துள்ளதாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சாடினார்.

அரசியலில் கேள்வி கேட்பது சுலபம். ஆனால் பதில் சொல்லும் இடத்தில் இருக்கும்போதுதான் அதன் கஷ்டம் புரியும் என்பதை அவர்கள் இன்று உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.

நாட்டின் சுதந்திரம் முதல் இந்திய சமுதாயத்தின் அடிப்படை தேவைகள், நமது உரிமை அனைத்தையும் கேட்டு பெற்றுத் தந்தது மஇகாதான்.

தமிழ்ப்பள்ளி விவகாரம், ஆலயம் விவகாரம், கல்வி மேம்பாடு, தோட்ட மேம்பாடு என பலவற்றை இந்திய சமுயாத்திற்கு பெற்று தர போராடி கட்சி மஇகாதான்.

ஆனால் மன்சாட்சி இல்லாதவர்கள் இன்று மஇகா என்ன செய்தது என்று கேட்கிறார்கள் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

அதேவேளையில் மஇகாவை வீழ்த்தினால்தான் இந்தியர்களின் வாக்கை பெற முடியும் என்று முடிவெடுத்து வேலை செய்தவர்கள்,

மஇகா இல்லை என்றால் இந்திய சமுதாயம் தத்தளிக்கும் என்பதை மறந்துவிட்டார்.

அதனை செய்து விட்டு அவர்களும் இன்று ஆட்சியில் அமர்ந்து கொண்டு மௌனம் சாதிக்கின்றனர் என அவர் மஇகாவின் 79ஆவது தேசிய பொது பேரவையில் கூறினார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles