தேசிய முன்னணியில் இருந்து மஇகா வெளியேற வேண்டும்; பேராளர்கள் தீர்மானம்!

காளிதாஸ் சுப்ரமணியம்

ஷா ஆலம், நவ 16-
இன்று நடைபெற்ற மஇகா ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேராளர்கள் பாரிசான் நேஷனலில் இருந்து வெளியேறி எதிர்க்கட்சி கூட்டணியான பெரிகாத்தான் நேஷனலில் சேருவதற்கான தீர்மானத்தை ஒருமனதாக அங்கீகரித்துள்ளனர்.

இருப்பினும் பேராளர்கள் தீர்மானம் குறித்து ம இகா மத்திய செயற்குழு கூட்டத்தில் விவாதித்து முடிவு செய்யப்படும் என்று ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் தெரிவித்தார்.

தேசிய முன்னணியில் இருந்து ம இகா வெளியேற வேண்டும் என்பதில் இன்று நடைபெற்ற மாநாட்டில் பேராளர்கள் உறுதியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles