
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர்,நவ.16-
இன்றைய அரசாங்கத்தில் வேலை செய்வதற்கு சரியான இந்திய கட்சி இல்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் என்னிடமும் டத்தோஸ்ரீ சரவணனிடம் கூறியதாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் இன்று தெரிவித்தார்.
இந்தியர்களுக்காக செயல்பட இன்றை ஆட்சியில் முறையான இந்திய கட்சி இல்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எங்களிடம் கூறினார்.
பிரதமர் இந்திய சமுதாயத்திற்கு உதவ தயாராக இருக்கிறார்.
ஆலயங்களுக்கு மானியம் தேவை என்ற கோரிக்கையை நான் இதற்கு முன்னவர் அவரிடம் முன்வைத்தேன். தற்போது ஆலயங்களுக்கான மானியம் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அவருடனான் சந்திப்பில் எம்ஐஇடி கீழ் 25 மில்லியன் வெள்ளி மானியம் வழங்குவதாக அறிவித்தீர்கள்.
ஆனால் அந்த தொகை இன்னும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று கூறியதும் அதன் தொடர்பில் பேசி உடனடியாக அந்த மானியத்தை எம்ஐஇடி-க்கு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கினார்.
தற்போது அவர் இந்திய சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய உதவிகளை முறையாக செய்யவும் அந்த திட்டங்களையும் வழிநடத்த முறையான தளம் இல்லை என்பதை அவர் எங்களிடம் கூறினார் என்று மஇகாவின் 79ஆவது தேசிய பொதுப் பேரவையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

