கையேந்தி வாழ வேண்டிய அவசியம் மஇகாவுக்கு இல்லை! :டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் ஆவேசம்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர்,நவ.16-
இன்றைய அரசியல் சூழ்நிலையில் கையேந்தி வாழ வேண்டிய தேவை மஇகாவுக்கு இல்லை என்று டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சூளுரைத்தார்.

அதேசமயம் நாங்கள் யாருக்கும் பயப்பட மாட்டோம்.
எங்களுக்கு மானம்தான் முக்கியம்.

அரசாங்கத்தில் எந்த பதவி இல்லை என்றாலும் எங்களால் சமுதாயத்திற்கு சேவை செய்ய முடியும்.

ஆகவே யாரையும் நம்பி வாழ வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.

கடந்த 2008ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டதும் அனைவரும் அம்னோவை தொழு நோயாளி போல பார்த்தார்கள்.

தேசிய முன்னணியில் மசீசவை தொடர்ந்து இருக்க வேண்டும் என இழுத்து பிடித்ததும் மஇகாதான். இதனை மறந்துவிட வேண்டாம்.

மஇகாவிடம் உள்ள மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் பதவி, சட்டமன்றம், கவுன்சலர் பதவிகள் எங்களுக்கு முக்கியமல்ல. எங்களுக்கு மானமும் மரியாதையையும்தான் முக்கியம். ஆகையால் எங்களின் முடிவு அதன் அடிப்படையில் தான் இருக்கும் என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இன்று நடைபெற்ற மஇகா தேசிய பேராளர் மாநாட்டில் சூளுரைத்தார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles