பாராட்டு மழையில் பியெர்லி தான் – எம். தீனா ஜோடி

கோலாலம்பூர் நவ 17-
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஜப்பான் மாஸ்டர் பேட்மிண்டன் போட்டியில் மலேசிய
மகளிர் இரட்டையர் ஜோடி பியெர்லி தான் – எம். தீனா சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.

நாட்டின் உச்ச மகளிர் பேட்மிண்டன் இரட்டைப் பந்தய வீராங்கனைகள் பியெர்லி தான் – எம். தீனா முரளிதரன் நேற்று குமமோட்டோவில் நடைபெற்ற 2025 ஜப்பான் மாஸ்டர்ஸ் சாம்பியன்களாக வெற்றி பெற்றனர் .

இந்த ஆண்டில் மூன்றாவது பட்டத்தை தனதாக்கி, சர்வதேச அரங்கில் தங்கள் திறனை நிரூபித்து உள்ளனர்.

குமமோட்டோ மாகாண ஜிம்னேசியத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில்சூப்பர் 500 போட்டியில் நான்காவது நிலை இவானாகா-கி நகானிஷி ஜோடியை 54 நிமிடங்களில் 22-20, 21-19 என்ற புள்ளி கணக்கில் மலேசிய ஜோடி வீழ்த்தியது.

இந்த ஆண்டு மே மாதத்தில் தாய்லாந்து ஓப்பனில் முதல் பட்டத்தை வென்ற இவர்கள் கடந்த மாதம் பின்லாந்தின் வான்டா நகரில் நடைபெற்ற ஆர்க்டிக் ஓப்பனில் இரண்டாவது பட்டத்தைப் பெற்றனர்.

இப்போது ஜப்பான் மாஸ்டர் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளனர்.

ஜப்பான் போட்டியில் வெற்றி பெற்ற மலேசிய ஜோடிக்கு பிரதமர் உட்பட அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டுள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles