விளையாட்டு துறையில் சாதனை படைக்கும் இந்திய மாணவர்கள் கௌரவிக்கப்பட வேண்டும்! : அண்ட்ரு டேவிட்

பெட்டாலிங் ஜெயா, நவ 20-
அனைத்துலக விளையாட்டு அரங்குகளில் சாதனை படைக்கும் இந்திய மாணவர்கள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களை அங்கீகரிக்கும் வகையில் அவர்களை பாராட்டி சிறப்பிக்க வேண்டும்.
அவர்களுக்கு தேவையான கல்வி உபகார சம்பளம் உட்பட அனைத்து சலுகைகளையும் வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று மஇகா விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரு டேவிட் வலியுறுத்தினார்.

அண்மையில் கிழக்கு ஆசியாவில் உள்ள மங்கோலியா நாட்டின் தலைநகர் உலான் பாடோர் நகரில் நடைபெற்ற அனைத்துலக சதுரங்க போட்டியில் மலேசியாவை சேர்ந்த எஃப்.எம் ஜெனிவன் கேங்கேஸ்வரனும் எஃப்.எம் கேவின் மோகனும் வாகை சூடி வரலாறு படைத்தனர்.

நாட்டிற்கும் இந்திய இனத்திற்கும் தமிழ்ப்பள்ளிக்கும் பெருமை சேர்த்த அவர்களை கௌரவவிக்கும் வகையில் மஇகா விளையாட்டு பிரிவு சிறப்பு நிகழ்ச்சியை நடத்தியது.

இந்த மாணவர்கள் நமக்கு பெருமை சேர்த்து இருக்கின்றனர்.அவர்களை பாராட்டி சிறப்பு செய்ய வேண்டியது எங்களின் கடமை என்று அண்ட்ரு டேவிட் கூறினார்.

இன்று உலக அளவில் சதுரங்கம் போட்டிக்கு மிகசிறந்த எதிர்காலம் இருக்கிறது.

போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு அதிக பரிசுதொகை கிடைக்கின்றது.

எனவே இந்த போட்டி நமது இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
இதனை முன்னிட்டு வட்டார மாநில மற்றும் தேசிய அளவில் சதுரங்க போட்டிகளை நடத்துவது குறித்து நாங்கள் ஆராய்ந்து கொண்டு இருக்கிறோம்.

எங்களின் இந்த புதிய திட்டத்திற்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் முழு ஆதரவை வழங்கி இருக்கிறார்.

இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். எனவே இந்த போட்டிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பை நமது மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அண்ட்ரு கேட்டுக் கொண்டார்.

இதற்கிடையே இந்நிகழ்ச்சியில் கோலலங்காட் மாஇகா தொகுதித் தலைவர் ஸ்ரீதரன், சிலாங்கூர் மாநில சதுரங்க சங்கத் தலைவர் குமரேசன், ஸ்ரீலங்கா சதுரங்க சங்கத்தின் தலைவர் லெச்சுமணன் உட்பட மஇகா விளையாட்டுப் பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles