தமிழ்ப் பள்ளிகள் இடையிலான தேசிய கால்பந்து போட்டிக்கு முழு ஆதரவு வழங்குவோம் – அண்ட்ரூ டேவிட்

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் நவ 20-
மீபா எனப்படும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் ஏற்பாட்டில் நவம்பர் 22 ஆம் தேதி நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள செண்டாயன் ஐஆர்சி அரங்கில் தமிழ்ப் பள்ளிகள் இடையிலான தேசிய கால்பந்து போட்டி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு பினாங்கில் இந்த போட்டி நடைபெற்ற போது ம இகா மற்றும் எம்ஐஇடி முழு ஆதரவு வழங்கியது.

அந்த வகையில் வரும் சனிக்கிழமை நடக்கும் இந்த போட்டி வெற்றி பெற மஇகா மற்றும் எம்ஐஇடி முழு ஆதரவு வழங்கும் என்று ம இகா தேசிய விளையாட்டு பிரிவு தலைவர் அண்ட்ரூ டேவிட் தெரிவித்தார்.

தமிழ்ப் பள்ளிகள் இடையிலான தேசிய கால்பந்து போட்டியில் 20 அணிகள் சார்பில் 450 மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

அதேசமயம் பாலர் பள்ளி மாணவர்கள் பிரிவில் 70 பேர் கலந்து கொள்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் மீபா இந்த கால்பந்து போட்டியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.

ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்றும் துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோர் இந்த போட்டிக்கு பக்கம் பலமாக இருந்து வருகிறார்கள்.

நாட்டில் இளம் கால்பந்து விளையாட்டாளர் களை உருவாக்கும் மீபாவுக்கு எங்களின் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles