தமிழ் லென்ஸ் ஆசிரியர் வெற்றி விக்டர் ம.இ.கா-வில் இணைந்தார்!

கோலாலம்பூர், நவ – 20

தமிழ் லென்ஸ் ஆசிரியரும், அரசியல் செய்தியாளருமான வெற்றி விக்டர் இன்று ம.இ கா இணைந்ததாக அதிகாரபூர்வ அறிவிப்பை செய்தார்.

ம.இ.கா உருவாக்கி உள்ள செயலி மூலம் நேரடி உறுப்பியம் அதன் வாயிலாக இணைந்துள்ளார்.

இப்போது உள்ள ம.இ.கா எல்லா வகையிலும் உயிர் பெற்று
தைரியமாக குரல் எழுப்பி, எந்த கட்சிக்கும் அடிபணியாமல் இந்திய சமுதாயம் பக்கம் நிற்கிறது. வரலாற்று மிக்க இந்த கட்சியை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்கும் போது ஒரு மரியாதைகுரிய கட்சியாக ஒப்படைக்க கட்சி தலைமை முடிவு செய்துள்ளது.

இந்த தருணத்தில் சில அம்னோ தலைவர்கள் ம.இ.கா இந்தியர்களின் ஆதரவை இழந்து அம்னோ நம்பி பிழைக்கும் ஒரு கட்சி என சொல்லி வருகிறார்கள். இந்திய சமுதாயம் ம.இ.கா-வை ஆதரிக்க வில்லை என சொல்கிறார்கள்.

அவர்களுக்கு பதிலடி கொடுக்க ம.இ.கா ஆட்சியில் இருக்கும்போது பல முறை சீண்டி எழுதிய வெற்றி விக்டர்.
இன்று ம.இ.காவில் இணைந்தார்.

தான் இந்த கட்சியில் இந்த காலகட்டத்தில் இணைந்தது இளைஞர்கள் மத்தியில் ம.இ.கா மீண்டும் ஒரு புரட்சியை எழுப்ப உள்ளது, புதிய தலைமுறைக்கு ம.இ.காவின் வரலாறு தெரிய வேண்டும். அதே நேரத்தில் ம.இ.காவின் வழி இந்திய சமுதாயத்தின் தேவை எதிர்ப்பார்ப்பை நாமே வகுப்போம் உருவாக்குவோம்.

இந்த தாய் கட்சியை மற்றவர் இந்திய சமுதாயத்தின் ஆதரவை இழந்த ஒரு கட்சி என சாடுவதை பொறுத்து கொள்ள முடியாது… ஒரு இந்தியனாக சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு செய்தியாளராக ம.இ.கா இந்திய சமுதாயத்தின் குரல் என்பதை உணர்த்த இளைஞர்களை ஒரு குடையின் கீழ் ஒற்றுமையாக்க இந்திய சமுதாயத்தின் சக்தி மற்றவர்களுக்கு உணர்த்த நான் ம.இ.காவில் இப்போது இணைந்து சேவை செய்ய வருவதாக வெற்றி விக்டர் தெரிவித்தார்.

ம.இ.காவில் இணைவது தொடர்பான தனது எண்ணத்தை தேசிய தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ சரவணன் இருவரிடமும் தெரிவித்து விட்டதாக வெற்றி விக்டர் கூறினார்.

ஒரு குடையின் கீழ் இந்திய சமுதாயத்தின் பிரச்சனைக்கு கைகோர்த்து துணை நிற்போம் என்றார் வெற்றி விக்டர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles