
இன்றைய அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியில் துரித உணவுகள் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. கவர்ச்சியான விளம்பரமும், சுவையும் அனைவரையும் ஈர்க்கின்றன. குறிப்பாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களின் உணர்ச்சிகளைக் கவரும் வகையில் பொருட்களை சந்தைப்படுத்துதல் இன்றைய சூழலில் அதிகமாக காணப்படுகிறது.
விளம்பரம் கட்டுப்பாடற்ற நுகர்வு கலாச்சாரத்தை உருவாக்குவதும், ஆரோக்கியமற்ற பொருட்களை குழந்தைகள் உட்கொள்ள தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
சமூகவலைதளங்கள் மூலம் நேரடியாக விற்கும் உணவுகளின்
இனிப்பு, உப்பு, கொழுப்பு, நறுமணம் மற்றும் வண்ணங்கள் போன்றவை எந்த அளவுக்கு இருக்கிறது என்று சுகாதாரத்துறை மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இதுபோன்ற விளம்பரங்களைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் இன்னும் அதிகமான சட்டதிருத்தங்கள் மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்குகள் கொண்டு வரவேண்டும். உலக சுகாதார நிறுவனம் (WHO) உணவுப் பொருட்களின் சந்தைப்படுத்தலில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க அனைத்து நாடுகளும் கட்டாயக் சட்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
வயதுக்கு ஏற்ற உணவு முறைகளை பின்பற்றாத குழந்தைகள் இளம் வயதிலேயே பல நோய்களுக்கு ஆளாகின்றனர். நாட்டின் எதிர்கால நம்பிக்கையான இளையதலைமுறை பிள்ளைகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
மேலும் கல்வி அமைச்சு சுகாதார அமைச்சின் ஆதரவுடன் பள்ளிகளில் 12 வகையான உணவு மற்றும் பானங்களை பட்டியலிட்டு விற்பனை செய்ய தடை தடை விதித்ததையும் ஒரு புதிய வழிகாட்டுதல்களை வரையறை செய்துள்ளதையும் மிகத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
மேலும் அரசாங்கத்தால் மட்டுமே இதை முழுவதும் தடுக்க முடியாது, சிறுவயதிலேயே ஆரோக்கியமான உணவு முறையை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டியது பெற்றோர்களின் பொருப்பும் கூட. அவர்களுக்கு வழங்கப்படும் உணவை பெற்றோர்கள் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
கணேசன்
உரிமை
பகாங் மாநிலம்

