கெபூன் ராசா சாயாங் மூலம் பிறையிலிருந்து நாடாளுமன்றம் வரை திருப்புமுனை ஏற்படுத்திய பிறை எம்பிபிகே உறுப்பினர்கள்!

கோலாலம்பூர் டிச 4-
கெபூன் ராசா சாயாங் என்ற விவசாய திட்டத்தின் கீழ் பினாங்கு பிறை எம்பிபிகே உறுப்பினர்கள் புதிய சகாப்தம் படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற APPGM SDG திருவிழாவில் பங்கேற்கும் வாய்ப்பு பிறை MPKK கிடைத்தது .

இது நம்பமுடியாத வாய்ப்பு என்று பிறை எம்பிகேகே குழுவுக்கு தலைமை ஏற்றுள்ள ஸ்ரீ சங்கர் தெரிவித்தார் கிட்டத்தட்ட 42 நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருவிழாவிற்கு வருகை தந்தனர் .

பினாங்கில் அதன் பங்கை வெளிப்படுத்தவும், பினாங்கு மக்களின் வாழ்க்கை முறை மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு திட்டங்களை முன்வைக்க பிறை MPKK உறுப்பினர்கள் கிடைத்த இந்த தளத்தை நல்ல முறையில் பயன் படுத்தி கொண்டனர்.

சிறப்புஅம்சமாக “கெபுன் ராசா சயாங்” – ஒரு குப்பைக் கிடங்கிலிருந்து ஒரு செழிப்பான சமூகத் தோட்டமாக மாற்றப்பட்டது.

இந்த முயற்சியின் மூலம் பிறையில் உள்ள B40 குடும்பங்களுக்கு வாரந்தோறும் புதிய காய்கறிகள் விநியோகிக்கப்படுகின்றன.

இதைச் சாத்தியமாக்குவதில் ஆதரவளித்த பினாங்கு மாநில முதல்வர் YAB சௌ கோன் இயோவ் மற்றும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் YB டத்தோஸ்ரீ சுந்தரராஜூ, APPGM-SDG குழு மற்றும் MPKK பிறை குழுவினருக்கு மனமார்ந்த நன்றிகளை ஸ்ரீ சங்கர் தெரிவித்துக். கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles