
பேங்காக்: டிச 14-
தாய்லாந்து சீ விளையாட்டுப் போட்டியில் மலேசியாவின் பியெர்லி தான் – எம். தீனா ஜோடி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தது.
இன்று மாலையில் மகளிருக்கான பூப்பந்து இரட்டையர் பிரிவின் உலகின் 2ஆவது இடத்தில் உள்ள பியெர்லி தான் – தீனா ஜோடி, முதல் நிலை ஜோடியான இந்தோனேசியாவின் ஃபெப்ரியானா – மெய்லிசா ட்ரியாஸ் ஜோடியுடன் மோதியது.
சுமார் 85 நிமிடங்கள் நீடித்த ஒரு கடுமையான போட்டியில் 21-16, 19-21, 21-17 என்ற செட் கணக்கில் மலேசிய ஜோடி வெற்றி பெற்றது.
இதன் மூலம் சீ விளையாட்டுப் போட்டியில் பெண்கள் பூப்பந்து இரட்டையர் பிரிவில் மலேசியாவின் 10 ஆண்டுகால தங்கப் பதக்க வறட்சியை இந்த வெற்றியுடன் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது

