மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம்! விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும் – பிரதமர்

கோலாலம்பூர் டிச 14-
மலாக்கா டூரியான் துங்கலில் மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தி உள்ளார்.

ஏழைகள், சிறுபான்மையினருக்கான நீதியை வழங்குவதில் அரசாங்கம் சமரசம் செய்யாது.

மேலும் எந்த இனத்தின் மீதான ஒடுக்குமுறையையும் பொறுத்துக்கொள்ளாது என்றார் அவர்.

மூன்று இந்திய ஆண்கள் சம்பந்தப்பட்ட சமீபத்திய துப்பாக்கிச் சூடு வழக்கில், ஒரு நம்பிக்கையுள்ள நபராக, அதை ஏற்றுக் கொள்வது அல்லது மன்னிப்பது எனக்கு கடினம்.

பாதிக்கப்பட்டவர்கள் இந்தியரா, மலாய்க்காரரா, சீனர்களா அல்லது தயாக்காரா என்பது முக்கியமல்ல.

விசாரணை வெளிப்படையாகஇருக்க வேண்டும் என்று அவர் இன்று மலேசிய கிறிஸ்தவ கூட்டமைப்பு ஏற்பாடு செய்த கிறிஸ்துமஸ் தேநீர் விருந்தில் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles