

ஜோர்ஜ்டவுன், டிச 15-
முதன் முறையாக, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் (PHEB) கீழ் பதிவு செய்யப்பட்ட அனைத்து கோயில்களிலிருந்தும் இளைஞர்கள் பங்கேற்ற எழுவர் கிண்ண கால்பந்து போட்டி (7-ஏ-சைட் கால்பந்து) வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த வரலாற்று முயற்சி, கோயில் நிறுவனங்களின் முதுகெலும்பாக விளங்கும் கோயில் இளைஞர்கள் சமய சேவையில் சிறந்து விளங்குவது மட்டுமல்லாமல், விளையாட்டு மூலம் சமூகங்களை வழிநடத்தவும், ஒன்றிணைக்கவும், கட்டமைக்கவும் வல்லவர்கள் என்பதை நிரூபிக்கிறது.

PHEB உடன் இணைந்து ஏற்பாடு செய்ததற்காக குயின் ஸ்திரிட் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் நிர்வாகத்திற்கு வாழ்த்துகள் என்று இந்து அறப்பணி வாரியத்தின் துணை தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் தெரிவித்தார்.
போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்ததோடு RM5,000 வழங்கி ஆதரித்ததற்காக YB லிம் ஹுய் யிங்கிற்கு பாராட்டுகள் என்றார்.
இது வெறும் கால்பந்து மட்டுமல்ல.
இது மடானி மலேசியாவின் உணர்வுக்கு ஏற்ப ஒற்றுமை, ஒழுக்கம், தலைமைத்துவம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் பற்றியது என்று அவர் சொன்னார்.

