மலைபோல் குவிந்த மாலைகள்! பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

கோலாலம்பூர் டிச 16-
மஇகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் இன்று தமது 60 ஆவது வயது பிறந்த நாளை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தார்.

இவரின் பிறந்த நாள் விழா ம இகா நேதாஜி மண்டபத்தில்
மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்த விழாவில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தம்பதியர் கேக் வெட்டி மகிழ்ந்தனர்.

மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் அவர்கள் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தார்.

மஇகாவின் தேசிய உதவித் தலைவர்களான டத்தோஸ்ரீ அசோஜன், டத்தோ முருகையா டத்தோ நெல்சன், டான்ஸ்ரீ இராமசாமி, தலைமை செயலாளர் டத்தோ ஆனந்தன், பொருளாளர் டத்தோ கண்ணா சிவக்குமார் ஆகியோரும் மாலைகள் அணிவித்து சிறப்பு செய்தனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி கவிஞராக வலம் வரும் கவிப்பேரரசு வைரமுத்து இவ்விழாவில் கலந்து கொண்டு டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு வாழ்த்து கூறி சிறப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மஇகா மாநிலத் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் மற்றும் தொகுதி தலைவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு மாலைகள் அணிவித்தனர்.

மாலைகள் மலைபோல் குவிந்த காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles