மனிதவள அமைச்சராக டத்தோஸ்ரீ இரமணன் நியமனம்! யூனிஸ்வரன் துணை அமைச்சர்

கோலாலம்பூர் டிச 16-
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஆர்.இரமணன் மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று மாலையில் அமைச்சரவை மாற்றம் குறித்து அறிவிப்பு செய்தார்.

அந்த வகையில் தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை துணை அமைச்சராக இருந்த டத்தோஸ்ரீ இரமணன் இப்போது மனிதவள அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

மனிதவள அமைச்சராக இருந்த ஸ்டீவன் சிம் இப்போது தொழில் முனைவோர் மேம்பாட்டு துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இளைஞர் விளையாட்டு துறை அமைச்சராக இருந்த ஹன்னா இயோ இப்போது கூட்டரசு பிரதேச அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தித்தி வங்சா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி வர்த்தக வாணிப தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சலேஹா மற்றும் ஒற்றுமை துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோருக்கு மீண்டும் அமைச்சராக நியமனம் செய்யப்படவில்லை.

ஜோகூர் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினர் யூனிஸ்வரன் ஒற்றுமை துறை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles