

பேங்காக் டிச 17-
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வரும் சீ விளையாட்டு போட்டியில் முதல் முறையாக கண்காட்சி போட்டியாக கயிறு இழுத்தல் இடம் பெற்றது.
இதில் பெண்களுக்கான 250 கிலோ எடைப்பிரிவில் மலேசியா வீராங்கனைகள் தங்கம் வென்று அசத்தினர்.
அதேபோல் ஆண்கள் 600 கிலோ மற்றும் பெண்கள் 500 கிலோ எடை பிரிவில் மலேசியாவுக்கு மேலும் இரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

கயிறு இழுத்தல் போட்டியில் தாய்லாந்து மூன்று தங்கத்தையும் வியட்நாம் ஒரு தங்கத்தையும் வென்றது.
சிங்கப்பூர் ஆண்கள் பெண்கள் கலப்பு பிரிவில் ஒரு வெண்கலத்தை வென்றது.

சீ போட்டியில் கயிறு இழுத்தல் முதல் முறையாக அறிமுகப்படுத்தினாலும் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது என்று மலேசிய கயிறு இழுத்தல் சங்கத்தின் உதவித் தலைவர் மற்றும் SEAGames கயிறு இழுத்தல் விளையாட்டு மேல்முறையீட்டுக் குழுவின் தலைவருமான சத்யா சுதாகரன் தெரிவித்தார்.
போட்டி கடுமையாக இருந்தாலும் மலேசியர்கள் மூன்று பிரிவுகளில் பதக்கம் வென்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார் அவர்.

