மூன்று இந்திய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப் பட்ட சம்பவம்! ஒரு கொலையே! குடும்ப உறுப்பினர்கள் வரவேற்பு

கோலாலம்பூர் டிச 17-
மலாக்கா டுரியான் துங்காலில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை ஒரு கொலையாக அட்டெர்னி ஜெனரல் அலுவலகம் வகைப்படுத்தியதை மரணமடைந்தவர்களின் 3 குடும்பங்கள் வரவேற்கின்றன.

கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் தேதி மலாக்காவின் டுரியான் துங்காலில் போலிசாரால் மூன்று இந்திய இளைஞர்களான லோகேஸ்வரன் (வயது 29), புஷ்ப நாதன் ( வயது 21) மற்றும் புவனேஷ்வரன் ( வயது 24) ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை ஒரு கொலையாக 302 வகைப்படுத்த சட்டத் துறை தலைவர் (ஏஜிசி) முடிவை எடுத்துள்ளார்.

ஏஜிசியின் இந்த முடிவை மூன்று நபர்களின் குடும்பங்கள் வரவேற்கின்றன.

அவர்களின் வழக்கறிஞர்களான ராஜேஷ் நாகராஜன், சச்ப்ரீத்ராஜ் சிங் மற்றும் ஆகம அணி தலைவர் அருண் துரைசாமி ஆகியோர் இதனை கூறினர்.

இந்த வழக்கை கொலையாக விசாரிக்க ஆரம்பத்திலிருந்தே ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

இதில் சம்பவத்தின் ஆடியோ, நோயியல் நிபுணர் எங்களுக்கு வழங்கிய கண்டுபிடிப்புகள், பல புகைப்படங்கள் அடங்கும்.

அதிகாரிகள் இறுதியாக அதை கொலை என்று சரியாக வகைப்படுத்திய தால் குடும்பத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.

அதுதான் சரியான செயல் என்று அவர்கள் கூறினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles