
ஜொகூர் பாரு டிச 17-
யுஇசி (UEC) ஒருங்கிணைந்த சான்றிதழ் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று ஜொகூர் மாநில பெரிகத்தான் நேஷனல் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவான சயாப் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற மாநில உச்சமன்றக் கூட்டத்தில் இந்த முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டதாக, உச்சமன்ற உறுப்பினரான திரு சந்திர சேகரன் தெரிவித்தார்.
மாநிலத் தலைவர் டத்தோ தன் லேக் காங் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், யுஇசி சான்றிதழ் தொடர்பான விவகாரத்தில் தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநில துணைத் தலைவர் டத்தோ பூபாலன் பொன்னுசாமி இதுகுறித்து விவாதம் மேற்கொண்டார்.
அதன் பின்னர், ஒருமனதாக இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் விளம்பர நோக்கத்திற்காக சில அரசியல் கட்சிகள் யுஇசி சான்றிதழ் விவகாரத்தை அரசியலாக்குவதை நிறுத்த வேண்டும் எனவும், அந்தக் கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

