
நடந்து முடிந்த தேர்தலில் மக்களின் ஆதரவோடும் இறைவனின் ஆசியோடும் பக்கத்தான் ஹராப்பான் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்ததற்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் செபூத்தே ஜசெக பக்கத்தான் தலைவர்கள் முருகப் பெருமானுக்கு தேங்காய் உடைத்து காணிக்கையை செலுத்தினர்.
ஜாலான் ராஜா லாவூட்டில் வெளிரதம் பவனி வந்த வேலையில் செபூத்தே ஜசெக பக்கத்தான் தலைவர்கள் தண்ணீர் பந்தலை அமைத்து பக்தர்களுக்கு சுவையான அன்னதானம் வழங்கினார்.
பின்னர் வெள்ளி ரதம் வந்ததும் முருகப்பெருமானை தரிசித்து தேங்காய் உடைத்து காணிக்கை செலுத்தினர்.

