ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ டாக்டர் பி. இராமசாமி தலைமையில் தங்கரதம் புறப்பட்டது

தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு கொண்டாடப்படும் தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் முனைவர் டாக்டர் பி. இராமசாமி தலைமையில் தங்கரதம் இன்று அதிகாலையில் புறப்பட்டது.

முன்னதாக பினாங்கு குயின் ஸ்திரிட் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி பத்து காவான் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, துணை கல்வி அமைச்சர் லிம் ஹூய் யின் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

பின்னர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தங்கரதம் பினாங்கு பால தண்டாயுதபாணி ஆலயத்தை நோக்கி புறப்பட்டது.

வழி நெடுகிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்ற வேளையில் பொதுமக்கள் தண்ணீர் பந்தலை அமைத்து பக்தர்களுக்கு பல சுவையான உணவுகளை வழங்கினர்.

இன்னும் நாளையும் கொண்டாடப்படும் பினாஆங்கு தைப்பூசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தலைவருமான டாக்டர் இராமசாமி தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles