இந்திய சமுதாயத்திற்கு ஒரு இனிப்பான செய்தி காத்துக் கொண்டிருக்கிறது!
துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி அறிவிப்பு

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தில் இந்திய சமுதாயத்திற்கு ஒரு இனிப்பான செய்தி மிக விரைவில் காத்துக் கொண்டிருக்கிறது என்று கூட்டுறவு மேம்பாட்டு துறை துறை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி தெரிவித்தார்.

இந்த இனிப்பான செய்தி மிக விரைவில் வெளி வரும் என்று அவர் சொன்னார்.

பத்துமலை தைப்பூசத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ வெள்ளி ரதம் நேற்றிரவு லெபோ அம்பாங் சாலையை வந்த போது அந்த ஊர்வலத்தில் துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியும் கலந்து கொண்டார்.

லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல், துணை தலைவர் டத்தோ டாக்டர் கு.செல்வராஜா, செயலாளர் இராஜன், பொருளாளர் லோகநாதன், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் வேலாண்டி, இந்திரா, குணாசேகரன் ஆகியோர் ஏற்பாட்டில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலுக்கு துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி வருகை தந்தார்.

லெபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் சார்பில் சரஸ்வதி கந்தசாமிக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles