
சுமார் 70 லட்சம் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட பேராக் குனோங் ராப்பாட் தமிழ்ப் பள்ளிக்கான சாவியை இன்று முறையாக ஒப்படைக்கப்பட்டது.
இந்த பள்ளிக்கான சாவியை இன்று காலையில் கல்வி அமைச்சு ஒப்படைத்ததைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகால பள்ளி சர்சைக்கு ஒரு நிரந்தர முடிவு காணப்பட்டது
இதன்வழி இந்த பள்ளியின் திறப்பு விழா விரைவில் நடைபெறும் என்பதோடு பழைய பள்ளியில் பயின்றுவரும் 127 மாணவர்களும் விரைவில் புதிய கட்டடத்தில் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கல்வி அமைச்சின் மேம்பாட்டுப் பிரிவின் செயலாளர் டத்தோ Masyati abang Ibrahim புதிய பள்ளிக் கட்டிடத்தின் சாவியை பள்ளி நிர்வாகத்திடம் இன்று ஒப்படைத்தார்.
இந்த பள்ளி குனோங் ராப்பாட் வட்டாரத்தில் சிறந்த பள்ளியாக திகழும் என்பதில் ஐயமில்லை.

