

இரண்டு ஆண்டுகள் தடை நீக்கத்திற்கு பின்னர் இவ்வாண்டு நாடு தழுவிய அளவில் தைப்பூசம் மிகப்பெரிய அளவில் களைக் கட்டியுள்ளது.
நேற்றிரவு கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவிலில் இருந்து இரவு 10 மணிக்கு வெள்ளி ரதம் பத்துமலை திருத்தலத்தை நோக்கி புறப்பட்டது.
லேபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் பந்தலுக்கு மனித வள அமைச்சர் வ. சிவகுமார் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.
லேபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் இவர்களுக்கு மாலை அணிவித்து சிறப்பித்தார்.
லேபோ அம்பாங் உட்பட வெள்ளி ரதம் ஊர்வலமாக சென்ற அனைத்து சாலைகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இரண்டு ஆண்டுகள் இடைவெளிக்குப் பின்னர் வெள்ளி ரதம் பவனி வந்ததால் பக்தர்கள் தமிழ் கடவுள் முருகப்பெருமானை தரிசிக்க லட்சக்கணக்கில் திரண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

