கூலாய் முருகன் கோயில் உடைப்பு! ஜொகூர்மாநில அரசு விளக்கம் அளிக்கவேண்டும்! : சந்திர சேகரன்

ஜொகூர் பாரு, டிச 18-
கூலாய் நகராண்மை கழகம் கங்கார் பூலாய் முருகன் கோயிலை உடைத்து இந்துக்களை புண்படுத்தி விட்டது என கூலாய் தொகுதி பெரிக்கத்தான் நெசினேல் கட்சியின் மலாய்காரர் அல்லாத பிரிவின் தலைவரான திரு.சந்திர சேகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் கூலாய் நகராண்மை கழக அதிகாரிகளால் உடைக்கப்பட்ட அந்த கோவில் ஊடகங்கள் வழி தகவல் வெளியானதை இங்கே கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருக்கிறது.

கடந்த 17 ஆம் தேதியிட்ட அறிக்கை வாயிலாக அந்த ஆலயத்தை காலி செய்யயும்படி உத்தரவிட்ட கடிதம் கோயில் நிர்வாகத்திற்கு அனுப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

இத‌னிடையே கோயில் நிர்வாகத்திற்கும் நகராண்மை கழகத்திற்கும் அந்த இடம் குறி்த்து பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருப்பதாக அறியப்படும் சூழ்நிலையில் அந்த கோயிலை அவசர அவசரமாக உடைக்க வேண்டிய காரணம் என்ன என்று ஊராட்சி மன்றம் மற்றும் வீடணைப்பு ஆட்சி குழு உறுப்பினர் டத்தோ முகமது ஜாப்னி பின் முகமது ஷுகோர் விளக்கம் அளிக்க வேண்டும் என சந்திர சேகரன் வலியுறுத்தினார்.

கடந்த ஜனவ‌ரி மாதம் கோயில் நிறுவகத்துடன் நடந்த சந்திப்பில் ஆட்சிக்குழு உறுப்பினரான திரு. ரவின்குமார் கிருஷ்ணசாமி “மலையாளும் முருகபெருமான் ஆலயம் பாதுகாக்கப்படும்” என செய்தி வெளியிட்டு, இன்று தங்களுக்கு எதுவும் தெரியாது என கை நழுவுவது ஏற்புடைய செயலாக இல்லை என கூறிப்பிட்ட திரு. சந்திர சேகரன், எந்த அடிபடையில் அந்த வாக்குறுதி வழங்கினார் என ரவின் குமாரிடம் கேள்வி எழுப்பினார்.

இத‌னிடையே ஜொகூர் மாநில ஜசெக தலைவர் தியோ நீ சிங் அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் வேளையில் அவருக்கு இந்த ஆலயம் உடைக்கப் போவது தெரிவிக்கபட்டதா என்றும் அவர் கேள்வியை எழுப்பினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles