பிரதமருக்கு மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு பணியை தொடங்கினார் டத்தோஸ்ரீ இரமணன்

புத்ரா ஜெயா, டிச 18-
என் மீது நம்பிக்கை வைத்து மனிதவள அமைச்சர் பதவியை வழங்கிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு டத்தோஸ்ரீ ஆர் இரமணன் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

இன்று புத்ரா ஜெயாவில் உள்ள மனிதவள அமைச்சுக்கு வருகை தந்த டத்தோஸ்ரீ இரமணன் அவர்களுக்கு அமைச்சின் அதிகாரிகள் உற்சாக வரவேற்பை வழங்கினர்.

பின்னர் in clock செய்து தனது மனிதவள அமைச்சர் பணியை அதிகாரப்பூர்வமாக தொடங்கினார்.

அதன் பின்னர் அமைச்சின் அதிகாரிகள் மற்றும் அமைச்சின் கீழ் உள்ள ஏஜென்சி அதிகாரிகளுடன் முக்கிய சந்திப்பு நடத்தினார்.

சுமார் இரண்டு மணிநேரம் சந்திப்புக்கு பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தார்.

மனிதவள அமைச்சராக என்னை நியமனம் செய்த பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

நம்பிக்கைக்கு ஏற்றவாறு என் அமைச்சின் பணியை முறையாக செய்வேன் என்று அவர் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles