
காப்பார், டிச 18-
நேற்று முன்தினம் வல்லம்புரோசா தோட்டத் தமிழ்ப்பள்ளி மண்டபத்தில் “திருச்சிற்றம்பலம் முகாம்” நடைபெற்றது.
இதில் 5 ஆம் மற்றும் 6 ஆம் ஆண்டு சேர்ந்த 90 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
காலை 7.30க்கு இறை வாழ்த்துடன் குத்து விளக்கு ஏற்று நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து மாணவர்களுக்கு திருமுறை பாராயணம், திருநீறு பூசும் முறை, சமய கதைகள், இல்ல வழிபாடு செய்யும் முறை, ஆலயம் செல்வோம், சமய விளையாட்டு, சமய கேள்வி பதில் போன்ற அங்கங்கள் இடம் பெற்றது.
இம்முகாம் வட்டார சமய பிரிவு பொருப்பாளர் தொண்டர்மணி. செல்லதுரை இராமசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அவருக்கு உதவியாக வட்டார மகளிர் தலைவி திருமதி. சுமதி டத்தோ முத்துப்பிள்ளை, செயலவை உறுப்பினர் திருமதி. உமாவதி மனோகரன் ஆகியோர் உதவினார்.
மாணவர்களுக்கு சமய அறிவு, ஒழுக்கம் மற்றும் பண்பாட்டை வளர்க்கும் வகையில் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது சமய சார்ந்த கருத்துக்களை தெரிந்து கொண்டனர்.
மாணவர்களுக்கு அனைவருக்கும் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
அனைத்து மாணவர்களும் பங்கேற்பதற்கான சான்றிதழ் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மலேசிய இந்து சங்கம் காப்பார் வட்டாரப்பேரவை தலைவர் விவேக ரத்னா அருள்நேசன் ஜெயபாலன், வட்டாரப்பேரவை துணை தலைவர் தொண்டர்மணி மோகன கிருஷ்ணன் மரி, செயலாளர் தொண்டர்மணி சீமான் பெருமாள், பொருளாளர் திரு. மணியம் மாரியப்பன், ஆலய பிரிவு பொருப்பாளர் திரு. குமாரசாமி கிருஷ்ணன், இளைஞர் பிரிவு தலைவர் திரு. சிவராம் அர்ஜூணன் மற்றும் செயலவை உறுப்பினர் திருமதி. மலர்விழி கம்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
இவ்வேளையில் வட்டாரப்பேரவை சாா்பில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. உமா தேவி அவர்களுக்கு மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்க, பள்ளி வாரியத்திற்கு நன்றினை தெரிவித்துக் கொள்கிறோம்.

