சிங்கப்பூரில் வேலை செய்யும் 4 லட்சம் மலேசியத் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய காப்புறுதி திட்டம்! டத்தோஸ்ரீ இரமணன் அறிவிப்பு

கோலாலம்பூர் டிச 19-
சிங்கப்பூரில் வேலை செய்யும் 4 லட்சத்திற்கும் அதிகமான மலேசியத் தொழிலாளர்களை பாதுகாக்க புதிய காப்புறுதி திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் இன்று அளித்தார்.

மனிதவள அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட அவர் இன்று சொக்சோ தலைமையகத்திற்கு அதிகாரப்பூர்வமாக மேற்கொண்ட வருகையின் போது இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

சொக்சோவின்கீழ் உள்ள நான்கு சட்டங்களை உள்ளடக்கிய அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் அடுத்த மாதம் முதல் முழுமையாக இணையத்தில் சமர்ப்பிக்கலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இந்த நடவடிக்கை பங்களிப்பாளர்களுக்கு விஷயங்களை எளிதாக்குவது மட்டுமல்லாமல், அவர்கள் இனி சொக்சோ அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியதில்லை என்பதால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும்.

நாட்டில் உள்ள 10 மில்லியனுக்கும் அதிகமான முறையான, முறைசாரா துறை தொழிலாளர்களுக்கு சிறந்த சேவையை உறுதி செய்வதற்காக, அனைத்து சலுகை விண்ணப்பங்களையும் இணையத்தில் பதிவு செய்ய அனுமதிக்குமாறு சொக்சோவுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

இது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 1969 (சட்டம் 4), சுயதொழில் செய்பவர்களின் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2017 (சட்டம் 789), வேலைவாய்ப்பு காப்பீட்டு அமைப்புச் சட்டம் 2017 (சட்டம் 800), இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2022 (சட்டம் 838) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

ஜொகூர் காஸ்வேயைக் கடக்கும் கிட்டத்தட்ட 400,000 உள்ளூர் தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்புப் பெறுவதில் இருந்து விடுபடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அடுத்த ஆண்டு முதல் ஒரு சாத்தியக்கூறு ஆய்வின் மூலம் முன்னோடியாக காப்புறுதித் திட்டத்தை செயல்படுத்துவ தாக அவர் சொன்னார்.

புதிய மனிதவள அமைச்சராக, தொழிலாளர்களின் நலனுக்காக 24 மணி நேர பாதுகாப்புத் திட்டம் தொடர்ச்சியாகவும், சுமூகமாகவும், திறம்படவும் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கும், வேலை நேரத்திற்கு வெளியே விபத்துகள் ஏற்பட்டால் அவர்களைப் பாதுகாப்பதற்கும் நான் உறுதி கொண்டுள்ளேன் என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles